உள்ளூர் செய்திகள்

மேயர் மகேஷ் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

வடசேரி பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் இன்று ஆய்வு

Published On 2022-12-21 15:18 IST   |   Update On 2022-12-21 15:18:00 IST
  • 14-வது வார்டு பகுதியில் அவர், தெரு, தெருவாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
  • பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் நரிக்குறவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தினமும் வார்டு வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இன்று 14-வது வார்டு பகுதியில் அவர், தெரு, தெருவாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். வார்டு பகுதியில் உள்ள பாலமோர் ரோடு, மாடன் கோவில், டென்னிசன் ரோடு, சார்லஸ் மில்லர் தெரு, மீட்தெரு, நியூ போர்ட் தெரு, எம்.எஸ்.ரோடு, டிஸ்டிலரி ரோடு, போலீஸ் ஸ்டேசன் ரோடு, கலை வாணர் தெரு, கன்னிமார் மேட்டு தெரு, முஸ்லிம் தெரு, ஓட்டுபுரைதெரு, காமராஜபுரம் மரச்சீனி விளை, வணிகர் தெரு, எம்.எஸ்.ரோடு, சாஸ்தான் கோயில் தெரு, வஞ்சி மார்த்தாண்டன் தெரு, ஆகிய பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அந்த வார்டு பகுதியில் உள்ள வடசேரி பஸ் நிலையத்தையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் நரிக்குறவர்களால் சில பிரச்சனைகள் வருகிறது. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

மேலும் பஸ் நிலையத்தில் எந்த வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், பொறியாளர் பாலசுப்பிர மணியன், மாநகர நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், வருவாய் ஆய்வா ளர் சுப்பையா, கவுன்சிலர் கலாராணி, தி.மு.க. மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News