உள்ளூர் செய்திகள்
கோட்டார் அருகே வீட்டில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை
- போலீசார் முருகன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வடி வீஸ்வரம் சுப்பையா காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து அவரது சகோதரர் சக்தி மகேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கோட்டார் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் முருகன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த முருகன், தனது தாயுடன் வாழ்ந்து வந்ததும் 4 ஆண்டுகளுக்கு முன்பு தாய் இறந்த பிறகு, தனியாக வசித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தான் அவர், வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலை யால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.