உள்ளூர் செய்திகள்
- நேற்று முன்தினம் இரவு ஒர்க் ஷாப் பினை பூட்டி விட்டு நேற்று காலை ஒர்க் ஷாப் திறக்க வந்த போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது
- அப்பகுதி சாலை ஓரங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே திங்கள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 62). இவர் பேருந்து பணிமனை அருகே கார் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் இரவு ஒர்க் ஷாப் பினை பூட்டி விட்டு நேற்று காலை ஒர்க் ஷாப் திறக்க வந்த போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே நின்ற வெள்ளை நிற அம்பாசிடர் கார் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதி சாலை ஓரங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.