உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் வாயில் கருப்பு துணி கட்டி காங்கிரசார் நூதன போராட்டம்
- நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்திய கிரக போராட்டம் இன்று நடந்தது.
- கலந்து கொண்டவர்கள் வாயில் கருப்பு துணியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் :
ராகுல் காந்தி பதவி நீக்கத்திற்கான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. அலுவலகம் முன்பு நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்திய கிரக போராட்டம் இன்று நடந்தது.
போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், மண்டல தலைவர்கள் சிவபிரபு, செல்வன், கண்ணன், ஆதிராம், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சவுந்தர் மற்றும் நிர்வாகிகள் சோனி விதுலா, ஐரின் சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாயில் கருப்பு துணியுடன் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.