உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் 

பண்டிகை காலங்களில் உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையில் மக்களுக்கு விற்க வேண்டும்

Published On 2022-10-12 10:14 GMT   |   Update On 2022-10-12 10:14 GMT
  • சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக,பாதுகாக்கப்பட்ட தண்ணீராக இருக்க வேண்டும்.
  • தயாரிப்பாளர்களுக்கு கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் பணி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஸ்வீட்ஸ் பாக்ஸ்களை விற்பனை செய்யும் வணி கர்கள், அந்த பாக்ஸில் ஸ்வீட்ஸ் தயாரிப்பு தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும்.

உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இனிப்பு களில் சட்டத்தில் அனுமதிக்க ப்பட்ட செயற்கை வண்ண ங்களை சேர்க்கவேண்டும். அதிகப்படியான வண்ண ங்களை சேர்த்தலை தவிர்க்க வேண்டும் .

சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விபர ங்களை தகவல் பலகை யாக உணவு விற்பனை கூடத்தில் வைக்கவேண்டும். மேலும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உபயோகப் படுத்தக்கூடாது.

சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக, பாதுகாக்கப்பட்ட தண்ணீராக இருக்க வேண்டும். சுத்தமான தண்ணீரில் தான் பொரு ட்களை சுத்தம் செய்ய வேண்டும். உணவு கையாளு தல் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்ப வர்கள் கையுறைகள், தலைகவசம் மற்றும் மேலங்கிகள் ஆகியவற்றை அணிய வேண்டும்.

அனைத்து உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 - ன் கீழ் உரிமம் ( அ ) பதிவுச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பண்டிகை காலமான தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்ட பங்கள், வீடுகள் ஆகிய இடங்களில் ஆர்டரின் பேரில் விற்பனைக்காகத் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும்.

தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு மற்றும் கார வகை கள் சில்லறை விற்பனை செய்யும்பொழுது காட்சிப்படுத்தப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் முன் தயாரிக்க ப்பட்ட தேதி மற்றும் சிறந்த பயன்பாட்டு தேதி கண்டிப்பாக எழுதி வைக்க வேண்டும்.

மேலும் நுகர்வோர்கள் உணவுப் பொருட்கள் தரம் பற்றிய குறைபாடுகளுக்கு உணவு பாதுகாப்பு துறையின் 'வாட்ஸ்ஆப்' புகார் எண் 9444042322 என்ற எண்ணிலோ உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலக தொலை பேசி எண் 04652-276786 என்ற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News