உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம்

Published On 2022-07-11 13:43 IST   |   Update On 2022-07-11 13:43:00 IST
  • 293-வது மதுரை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிகர தேசிக பரமாச்சர்ய சுவாமிகள் நேற்று கன்னியாகுமரி வந்தார்
  • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்

கன்னியாகுமரி :

293-வது மதுரை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிகர தேசிக பரமாச்சர்ய சுவாமிகள்நேற்று கன்னியாகுமரி வந்தார். அவர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.

அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அங்குஉள்ளஸ்ரீ கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன்சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திரா காந்த விநாயகர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர் ஸ்ரீ சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

பின்னர் அவர் கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அவருடன் இந்து முன்னணி மாநில பேச்சாளர்வக்கீல்எஸ்.பி.அசோகன், இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர். ராம்ரவிக்குமார், பா.ஜ.க.வின்பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர்சி.எஸ்.சுபாஷ் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News