உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை நடந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார்

Published On 2022-12-24 08:51 GMT   |   Update On 2022-12-24 08:51 GMT
  • டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய மினி மாரத்தானில் பங்கேற்றனர்.
  • 21 கிலோமீட்டர் தூரத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பரசப்பா கலிடா 1 மணி நேரம் 9 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார்.

நாகர்கோவில் :

பழையாற்றை பாது காக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி இன்று கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை 21 கிலோமீட்டர் தூரம் நடந்தது.

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய மினி மாரத்தானில் பங்கேற்றனர்.

மணக்குடி, புத்தளம், தெங்கம்புதூர், கோட்டார், சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம் வழியாக நாகர் கோவில் அண்ணா விளை யாட்டரங்கத்தில் முடிவ டைந்தது. அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிகிரண் பிரசாத், சரவணன் ஆகியோர் 21 கிலோ மீட்டர் தூரத்தையும் ஓடி வந்தனர். 21 கிலோமீட்டர் தூரத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பரசப்பா கலிடா 1 மணி நேரம் 9 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார்.

முதல் பரிசாக இவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.கேரளாவைச் சேர்ந்த ஜெகநாதன் 1 மணி நேரம் 9 நிமிடம் 59 வினாடிகளில் கடந்து இரண்டாவது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த வினோத் 1 மணி நேரம் 13 நிமிடம் 53 வினாடிகளில் கடந்து மூன்றாம் பரிசை பெற்றார்.

இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றி தழ்களும், மெட்டலும் வழங் கப்பட்டது. 21 கிலோ மீட்டர் பெண்களுக்கான பிரிவில் சமீதா முதல் பரிசு பெற்றார். இவர் 2 மணி நேரம் 37 நிமிடம் 42 வினாடிகளில் 21 கிலோ மீட்டரை கடந்தார். இவருக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-வது பரிசை அஸ்வினி தட்டி சென்றார். இவர் 2 மணி நேரம் 50 நிமிடம் 43 வினாடிகளில் கடந்தார். இவருக்குரூ. 15,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 3-வது பரிசை தீபா பெற்றார். இவர் 3 மணி நேரம் 7 நிமிடம் 11 வினாடிகளில் கடந்தார். இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. ஆண்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான பிரிவில் ராமசாமி 1 மணி நேரம் 42 நிமிடம் 42 வினாடி களில் கடந்து முதல் பரிசு பெற்றார். இவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மாரப்பன் 1 மணி நேரம் 44 நிமிடம் 26 வினாடிகள் கடந்து 2-வது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. டிக்ஸன் 1மணி நேரம் 47 நிமிடம் 11 வினாடிகள் கடந்து மூன்றாம் பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

10 கிலோமீட்டர் ஆண்க ளுக்கான மினி மாரத்தான் போட்டியில் தினேஷ் முதல் பரிசும், ஆனந்த அசோக் 2-ம் பரிசும், நிதீஷ்குமார் 3-ம் பரிசும் பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் போட்டியில் கிரிஸ்டல் முதல் பரிசும், கவுசிகா 2-வது பரிசும், அடினா ஆர்தார் 3-வது பரிசும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் சான்றிதழ்களும், மெட்டல்களும் வழங்கப்பட் டது.

இதை தொடர்ந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி அவரது 138- வது போட்டி என்பது குறிப்பி டத்தக்கதாகும்.

Tags:    

Similar News