உள்ளூர் செய்திகள்

குமரியில் மழை நீடிப்பு

Published On 2023-10-21 06:37 GMT   |   Update On 2023-10-21 06:37 GMT
  • கொட்டாரத்தில் 74.6 மில்லி மீட்டர் பதிவு
  • மாம்பழத்துறையாறு அணை நிரம்பியது

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் க னமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி யுள்ளது.

குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதியான வைக்கலூர், முஞ்சிறை பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடியாத நிலையில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொட்டாரம் பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், சந்தையடி பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். கொட்டாரத்தில் அதிகபட்ச மாக 74.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் விட்டுவிட்டு தினமும் மழை பெய்து வருகிறது.

பூதப்பாண்டி, சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல், ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடை யாமடை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

சிற்றாறு அணைப்பகு தியில் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கி யுள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது. இதனால் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது. திற்ப ரப்பில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கு மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.

9 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிப்பதற்கு இன்று அனுமதி அளிக்கப பட்டுள்ளது. சுற்றுலா பயணி கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். மாம்பழத்துறையாறு அணை கடந்த 2-ந்தேதி 3.28 அடியாக இருந்தது. அதன்பிறகு கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 21 நாட்களில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. முழு கொள்ளள வான 54.12 அடி எட்டி நிரம்பி வழிவதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய தண்ணீரை பாசனத்திற்காக திறந்து விட்டுள்ளனர்.

இதேபோல் முக்கடல் அணையும் நிரம்பி வருகிறது. நாளைக்குள் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.46 அடியாக உள்ளது. அணைக்கு 704 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 229 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. அணைக்கு 496 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 23.50 அடியாக உள்ளது. தொடர் மழையின் கார ணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 125-க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

நேற்று அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மழைக்கு மேலும் ஒரு வீடு இடிந்துள் ளது. பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்ட நெற்ப யிர்களும், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களும் மூழ்கியுள்ளதால் விவசா யிகள் கவலை அடைந்துள்ள னர்.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பெருஞ்சாணி 2.8, சிற்றார் 1-28.2, சிற்றார் 2-32.6, பூதப்பாண்டி 5.2, களியல் 7.4, கன்னிமார் 5.8, கொட்டாரம் 74.6, மயிலாடி 43.2, நாகர்கோவில் 27.2, தக்கலை 22.4, குளச்சல் 13, இரணியல் 15.6, மாம்பழத்துறையாறு 45, திற்பரப்பு 8.2, ஆரல் வாய்மொழி 35, கோழிபோர்விளை 5.3, அடையாமடை 17.2, குருந் தன்கோடு 35.4, ஆணை கிடங்கு 43.6, முக்கடல் 15.4.

Tags:    

Similar News