குளச்சலில் நகராட்சியின் நடவடிக்கையை கண்டித்து கவுன்சிலர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்
- தி.மு.க. மீனவர் அணி செயலாளர் பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு
- ஏ.ஜே.ஸ்டாலின் குளச்சல் நகராட்சி அலுவலகம் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்
கன்னியாகுமரி :
குளச்சல் நகராட்சியில் வீட்டு வரி பாக்கி வைத்தி ருப்பவர்களின் குடிநீர் இணைப்பை துண்டித்த நக ராட்சியின் நடவடிக்கையை கண்டித்து கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதில் நகர்மன்ற துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர்கள் ஜாண்சன், ரகீம், சஜிலா, சந்திர வயோலா, பனிக் குருசு, மேரி, ஷீலா ஜெயந்தி, ரமேஷ், ஜாண் பிரிட்டோ, சுஜித்திரா, தனலட்சுமி, வினேஷ், லாரன்ஸ், திலகா ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட கவுன்சிலர்களுடன் ஆணை யர் விஜயகுமார் மாலை பேச்சு வார்த்தை நடத்த முயற்சித்தார். ஆனால் கவுன்சிலர்கள் அதை ஏற்க வில்லை.
தொடர்ந்து நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் தி.மு.க. தலைமை ஏற்பாட்டின் படி மாநில தி.மு.க. மீனவர் அணி செய லாளர் ஏ.ஜே.ஸ்டாலின் குளச்சல் நகராட்சி அலுவலகம் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். காலையில் (நேற்று) ஆணை யாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதை யடுத்து நேற்று மதியம் ஆணையர் விஜயகுமார் மற்றும் மேற்கூறிய கவுன்சி லர்களுடன் தி.மு.க. மீனவர் அணி செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் நகராட்சி வரி பாக்கி வைத்திருப்பவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு பெயர் பட்டியலை வார்டு கவுன்சிலர்களிடம் அளித்து வசூல் செய்வது எனவும், ஒத்துழைப்பு அளிக்கா தவர்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பது எனவும், அரசின் மக்கள் நலத்திட்டங்களை அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்ச மின்றி செய்வது எனவும், நடை பாதையோரம் கடை களில் கட்டண வசூல் செய்யக்கூடாது எனவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கொண்டு வரும் சிறப்பு திட்டங்களுக்கு மேற்கூறிய கவுன்சிலர்கள் ஆதரவு அளிப்பது எனவும், நக ராட்சி புதிய கடைகள் குத்தகை வாடகைக்கு விடும்போது நகர்மன்றத்தில் தெரியப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து குளச்சல் நகராட்சி கவுன்சிலர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.