உள்ளூர் செய்திகள்
- பேச்சிப்பாறை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- இவர் கடந்த 21-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
கன்னியாகுமரி:
பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 62). இவர் கடந்த 21-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் நேற்று மோதிரமலை ரப்பர் தோட்டத்தில் ராமச்சந்திரன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடல் அருகே விஷ பாட்டில் இருந்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. பேச்சிப்பாறை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ராமச்சந்திரன் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது 2 மகன்களும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.