உள்ளூர் செய்திகள்
விழாவில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்ட காட்சி.
கோவில்பட்டியில் மகா புவன காந்தாரியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி
- பங்குனி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடுவிழா நடைபெற்றது.
- பொங்கல் விழா பூஜைகளை அர்ச்சகர் பாலு செய்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் அமைந்துள்ள மகா புவன காந்தாரியம்மன் கோவில் பங்குனி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடுவிழா மற்றும் காந்தாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் தர்மகத்தா ரவி பாண்டியன், தலைவர் ஏமராஜ், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் காந்தாரி முத்து, துணைத்தலைவர் கருப்பசாமி, துணை செயலாளர் கருப்பசாமி, துணை பொருளாளர் இளையராஜா, இணை பொருளாளர் பொன்ராஜ் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பூஜைகளை அர்ச்சகர் பாலு செய்தார். பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை வசதிகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.