உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் தடகள போட்டியில் தங்கம் வென்றவருக்கு பாராட்டு

Published On 2023-03-22 14:56 IST   |   Update On 2023-03-22 14:56:00 IST
  • 25 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
  • 5 ஆயிரம் மீட்டர், 15 ஆயிரம் மீட்டர் போட்டிகளிலும் பங்கேற்று தங்கபதக்கமும், சான்றிதழும் பெற்றார்.

ஊட்டி,

குன்னூர் டேன் டீ பகுதியை சார்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர் உதயகுமார். இந்திய வனத்துறை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அரியனா மாநிலம் சண்டிகர் பஞ்சுளா மாவட்டத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்றார். இதில் அவர் 25 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

மேலும் 5 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்திலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இதேபோல் கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாஸ்டர் அத்லெட்டிக் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர், 15 ஆயிரம் மீட்டர் போட்டிகளிலும் பங்கேற்று தங்கபதக்கமும், சான்றிதழும் பெற்றார்.

தடகள போட்டிகளில் தங்கம் வென்ற தடகள வீரர் உதயகுமார், நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு. முபாரக்கை சந்தித்து, தான் வெற்றி பெற்ற தங்க பதக்கங்களையும், சான்றிதழையும் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது குன்னூர் நகரக் செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ரஹீம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News