உள்ளூர் செய்திகள்
கோவில் நிலம் மீட்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு
- ரூ.14 கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
- எல்லை கற்கள் நடப்பட்டு தகவல் பதாகை வைக்கப்பட்டது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூரில் கொழுந்தீஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
ரூ.14 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாகப்பட்டினம் இணை ஆணையர் குமரேசன் தலைமையில், திருவாருர் உதவி ஆணையர் ராணி, திருவாரூர் ஆலய நிலங்கள் தனி தாசில்தார் லெட்சுமி பிரபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு திருக்கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து, எல்லை கற்கள் நடப்பட்டு தகவல் பதாகை வைக்கப்பட்டது.
இப்பணியில் இத்திருக்கோவில் செயல் அலுவலர் சிவகுமார், கோட்டூர் சரக ஆய்வாளர் புவனேஸ்வரன், நில அளவையர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.