உள்ளூர் செய்திகள்

மழையின் போது ஏற்பட்ட மண் சரிவினால் உருவான சேற்றில் சிக்கிய காரினை படத்தில் காணலாம்.

வெள்ளிமலை பெரியார் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் மண் சரிவு: சேற்றில் சிக்கிய காரினால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-11-07 13:04 IST   |   Update On 2023-11-07 13:04:00 IST
  • வெள்ளிமலை, கரியாலூர், சேரப்பட்டு உள்ளிட்ட 20 கிராமங்களில் இன்று அதிகாலை 2 மணி முதல் மழை பெய்தது.
  • மலைக்கும்-கல்வராயன்மலைக்குமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

வங்கக்கடலில் உருவாகி யுள்ள வளிமண்டல மேல டுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவ லாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் மற்றுமொரு வளிமண்ட மேலடுக்கு சுழற்சி நேற்று உருவாகியது. இதனால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கள்ளக் குறிச்சி மாவட்டம் கல்வரா யன்மலையில் உள்ள வெள்ளிமலை, கரியாலூர், சேரப்பட்டு உள்ளிட்ட 20 கிராமங்களில் இன்று அதிகாலை 2 மணிமுதல் மழை பெய்தது.

இதனால் இன்று காலை 5 மணியளவில் வெள்ளி மலை பெரியார் நீர்வீழ்ச்சி அருகேயுள்ள சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. அவ்வழியே இன்று காலை 6 மணிக்கு அவ்வழியே வந்த கார், மண் சரிவால் சாலையில் இருந்த சேற்றில் சிக்கியது. இதனால் வெள்ளி மலைக்கும்-கல்வராயன்மலைக்குமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அந்த சாலையின் இருபுற மும் அரசு, மற்றும் தனியார் பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு விரைந்து வந்த அப்பகுதி இளைஞர்கள், சேற்றில் சிக்கியிருந்த காரினை மீட்டு சாலையோரம் நிறுத்தினர். தொடர்ந்து சாலையில் இருந்த சேற்றினை அகற்றி னர். மேலும், மரக்கிளை களையும் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போக்குவரத்து நெரிசலை இளைஞர்களும், பொதுமக்களும் சரி செய்த னர்.

Tags:    

Similar News