உள்ளூர் செய்திகள்

பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

Published On 2023-06-28 14:29 IST   |   Update On 2023-06-28 14:29:00 IST
  • இந்து சமய அறநிலையத்துறை பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
  • வழக்கு விசாரணையை 4 வாரத் திற்கு ஒத்திவைத்தனர்.

மதுரை

மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராம லிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் கோவிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளன. இந்த நிலையில் மலைக்கு போகும் பாதையில் நெல்லித்தோப்பு எனும் பகுதியில் ரம்ஜான் மாதங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், "மலைக்கு மேல் தானே தர்காவும் அமைந்துள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடாது என கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரத் திற்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News