உள்ளூர் செய்திகள்
பாலதண்டாயுதபாணி கோவிலில் அன்னதானம்
- பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாலதண்டாயுதபாணி கோவிலில் அன்னதானம் நடந்தது.
- குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை சிறுமலை அடிவாரத்தில் உள்ள கோம்பை கரட்டில் பாலதண்டாயு தபாணி கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
இதையொட்டி பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை பாரதீய ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி முன்னாள் மாநிலத்தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி வழங்கினார். இதேபோல் குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.