உள்ளூர் செய்திகள்
- திருமங்கலம் அருகே தி.மு.க. சார்பில் அன்னதானம் நடந்தது.
- அய்யனார் சாமி, வெயில் உகந்த அம்மன் ேகாவிலில் எருதுகட்டு, குதிரை எடுப்பு பெருவிழா நடந்தது.
திருமங்கலம்
செங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் சாமி, வெயில் உகந்த அம்மன், முத்தையாசாமி கோவில் எருதுகட்டு, குதிரை எடுப்பு பெருவிழாவை முன்னிட்டு திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் ஏற்பாட்டில் சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் லதா அதியமான், திருமங்கலம் நகரச்செயலாளர் ஸ்ரீதர், நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன் அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், கவுன்சிலர் திருக்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.