- மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ.7.97 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
- மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மதுரை
மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் டவுன், சின்னாளப்பட்டி, பழனி, நெய்க்காரப்பட்டி, சுவாமிநாதபுரம், நத்தம், கள்ளிமந்தயம், குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது.
மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், வாடிக்கையாளர்களிடம் ரூ.7 லட்சத்து 42 ஆயிரத்து 886 அபராதம் வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.55 ஆயிரம் அபராதம் செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.7 லட்சத்து 97 ஆயிரத்து 886 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.