உள்ளூர் செய்திகள்
அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொதுக்குழு கூட்டம்
- அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
- நிகழ்ச்சி முடிவில் ஞானகுமார் நன்றி கூறினார்.
மேலூர்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மேலூர் கோட்டை கிணறு தெருவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். மதுரை 6-ம் பகுதி செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். சபரிமலை சேவைகள், சங்க வளர்ச்சி குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், 7-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கமாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலூர் துணைச் செயலாளர் அழகுராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் ஞானகுமார் நன்றி கூறினார்.