உள்ளூர் செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- மதுரை வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அமைப்பாளர் வேல்மயில் பேசினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம், பணிக்கொடை ரூ.5 லட்சம், காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சூசைநாதன் தலைமை தாங்கினார். மூர்த்தி, பிச்சையம்மாள் முன்னிலை வகித்தனர். ராஜகுமாரி வரவேற்றார்.
டி.என்.ஜி.ஏ. தலைவர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அமைப்பாளர் வேல்மயில் பேசினார். இதில் பானு, தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணைச்செயலாளர் கார்த்திகை லட்சுமி நன்றி கூறினார்.