உள்ளூர் செய்திகள்
- மதுரை சோழவந்தானில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.
- இந்த போட்டியில் குருவித்துறை அணி முதல் பரிசை பெற்றது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சங்கங்கோட்டை கிராமத்தார்கள் இளைஞர்கள் மற்றும் எஸ்.ஆர். ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், சங்கங்கோட்டை கிராம தலைவரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சிவா, சோழவந்தான் அரிமா சங்கத் தலைவர் மருது பாண்டியன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற குருவித்துறை அணியினருக்கும், 2-ம் பரிசை மதுரை மாடக்குளம் அணியினருக்கும், 3-வது பரிசை திண்டுக்கல் மாவட்டம் மட்ட பாறை அணியினருக்கும் வழங்கப்பட்டது.