விபத்து நடந்த ஆண்டாள்புரம் பகுதியில் தடுப்புகள் அமைக்கும் போக்குவரத்து போலீசார்.
சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
- சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மதுரை
மதுரை ஆண்டாள்புரம் பழைய மில்காலனி பகுதியை சேர்ந்தவர் ஏசு ராஜா. இவரது மகன் ரோகன் (வயது20). இவர் நேற்று நண்பர் ராதாகிருஷ் ணனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறபட்டார். ஆண்டாள்புரம் பாலத்தில் சென்றபோது தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பஸ்சின் கீழ் பகுதியில் சிக்கிய ரோகன் மீது டயர் ஏறி இறங்கியது.
இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராதா கிருஷ்ணனை அங்கிருந்த வர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் கொடூர விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் அதிவேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. எனவே தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து இன்று காலை போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த சாைலயின் நடுவே தடுப்புகள் அமைத்த னர்.
மேலும் குறிப்பிட்ட பகுதி களில் வாகனங்கள் மெது வாக செல்வதற்கும் நட வடிக்கை எடுத்தனர். விபத்து சிக்கி வாலிபர் இறந்த பிறகு போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. மதுரை திருப்பரங்குன்றம் சாலை யில் தமிழ்நாடு பாலி டெக்னிக் கல்லூரி, மதுரா கல்லூரி மற்றும் முக்கிய நிறுவனங்கள், கோவில்கள் உள்ளன. இதனால் அந்த சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்கின்றனர். ஆனால் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படா ததால் பொதுமக்கள் ஒரு வித பதட்டத்துடனே கடக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு பாலிடெக்னிக் முன்புறம் உள்ள சாலை, ஆண்டாள் புரம் பகுதி, பழங்காநத்தம் சந்திப்பு போன்ற பகுதிகளில் அதிவேகமாக வரும் வாக னங்களுக்கு இடையில் பொதுமக்கள் உயிரை பண யம் வைத்து சாலையை கடக்க வேண்டியுள்ளது.
எனவே மேற்கண்ட பகுதிகளில் விபத்துகள் நடக்காமல் இருக்க போலீ சார் வேகத்தடை மற்றும் தடுப்புகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பசுமலையில் உள்ள ஒரு பள்ளி முன்பும் தடுப்புகள் அமைத்து வாகன வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது.