உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் மருத்துவ முகாம்

Published On 2023-05-13 14:36 IST   |   Update On 2023-05-13 14:36:00 IST
  • சிறப்பு மருத்துவ முகாமை திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் நடத்தியது.
  • காப்பகத்தில் உள்ள 46 நபர்களுக்கும் கண் பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தர வின்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படி பொது சுகாதார துறை மூலம் நடமாடும் மருத்துவ வாகன வசதி மற்றும் ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் நடத்தியது.

முகாமில் டாக்டர்கள், சித்தா டாக்டர்கள், பல் மருத்துவர்கள், பிசியோ தெரபி , எக்ஸ்ரே எடுக்கும் நிபுணர், செவிலியர்கள் உதவியாளர்கள் என மொத்தம் 35 பேர் கொண்ட குழு மருத்துவ வசதி வாகனங்களுடன் நம்பிக்கை மனநல காப்பதற்கு வந்து காப்பகத்தில் உள்ள 46 நபர்களுக்கும் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சுகர் பரிசோதனை, நடமாடும் வாகனத்தில் எக்ஸ்ரே எடுத்து அனைவருக்கும் கண் பரிசோதனைகளும் பல் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் எடுக்கப்பட்டது. அனைவரையும் டாக்டர்கள் தனித்தனியே நன்கு பரிசோதித்து மருந்து மாத்திரை தேவையான வர்களுக்கு வழங்கினர்.காப்பகத்தில் உள்ள அனைவரும் பயன்பெற்றனர்.

இம்முகாமல் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் அனைவரும் வரவேற்று அறிமுகப்படுத்தினார். மாவட்ட மனநல மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். டாக்டர் முகைதீன் முன்னிலை வகித்தார்.

முகாமில் காப்பக பணியாளர்கள் பிரியா, வள்ளி, சரவணன், சங்கர், மைக்கேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நம்பிக்கை மனநல காப்பக செவிலியர் சுதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News