உள்ளூர் செய்திகள்
காமதேனு வாகனத்தில் முருகன் வீதி உலா நடைபெற்றது.
கோடியக்காடு கோவிலில் காமதேனு வாகனத்தில் முருகன் வீதி உலா
- வள்ளி தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பாலித்து வருகிறார்.
- பல்வேறு திரவியங்களால் முருகனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அமிர்தக டேஷ்வரர் கோவிலில் தனி சன்னதியில் வள்ளி தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பா லித்து வருகிறார்.
இந்த ஆண்டு வைகாசி பெருவிழா 7-ம் நாள் மண்டகபடியில் முருகனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, இரவு முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.