உள்ளூர் செய்திகள்

3 மாணவர்கள் பலியான இடம் அருகே இன்று மீண்டும் விபத்து

Published On 2022-09-11 15:02 IST   |   Update On 2022-09-11 15:02:00 IST
  • கார் மரத்தில் மோதியது.
  • அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

வடவள்ளி, செப்.11-

கோவை வடவள்ளி, நவாவூரை சேர்ந்தவர் விக்னேஷ்பாபு. இவரது மகன் ஆதர்ஸ் (வயது 18). என்ஜினீயங் மாணவர்.

இவரும், இவரது நண்பர்களும் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக ெதாண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டிற்கு சென்றனர். ஓணம் கொண்டாட்டம் முடிந்து ஆதர்ஸ், கல்லூரி நண்பர்களான வடவள்ளி எஸ்.வி. நகரைச்சேர்ந்த ரோஷன் (18), ரவி கிருஷ்ணன் (18), நந்தனன் (18) காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். காரை ரோஷன் ஓட்டினார்.

தொண்டாமுத்தூர் அருகே உள்ள தென்னம நல்லூர், கரியகாளியம்மன் கோவில் கோவில் அருகே உள்ள வளைவில் ரோஷன் காரை திருப்ப முயன்றார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தோட்டத்து இரும்பு கேட் கதவை உடைத்துக்கொண்டு அங்கிருந்த 100 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது. கிணற்றில் 70 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் கார் முழுவதும் மூழ்கியது.

காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் கதவை திறந்து வெளியே வந்து உயிர் தப்பினார். ஆதர்ஷ், ரவிகிருஷ்ணன், நந்தனன் ஆகிய 3 பேரும் காருக்குள்ளே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் 3 பேர் பலியான இடம் அருகே இன்று காலை மீண்டும் மற்றொரு விபத்து நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கமுகை பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் குடும்பத்தினர் மருதமலை கோவிலுக்கு காரில் வந்தனர். பின்னர் தென்னமநல்லூர் வழியாக வெள்ளியங்கிரிக்கு செல்ல முடிவு செய்து காரில் சென்று கெரண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்து கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் கார் ரோட்டோரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

அடுத்தடுத்து விபத்துகள் நடப்பதால் இந்த இடத்தில் அபாய எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுத்தி உள்ளனர். மேலும் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் அந்த பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News