உள்ளூர் செய்திகள்
கொள்ளையர்கள்தாக்கியதில் காயம் அடைந்த டாஸ்மாக் ஊழியர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி.
விருத்தாசலம் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை
- விருத்தாசலம் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்தனர்.
- காயமடைந்த அசோகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள நடியப்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கில் அசோகன் (51) என்றவர் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு டாஸ்மாக்கில் வசூலான ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவர் புதுப்பேட்டை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது இரு மர்ம நபர்கள் அவரை உருட்டு கட்டையால் தாக்கி அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த அசோகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆலடி போலீசார் சந்தேகத்திற்கிடமான 2 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்