உள்ளூர் செய்திகள்

ஒரே ஒரு செவிலியர் மட்டும் பணியில் உள்ளார். அதனை படத்தில் காணலாம். 

ஒகேனக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

Published On 2023-05-07 08:43 GMT   |   Update On 2023-05-07 08:43 GMT
  • முதலுதவி சிகிச்சை போன்ற அனைத்து பிரச்சனைக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தான் நாட வேண்டிய உள்ளது
  • பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒகேனக்கல்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இங்குள்ள சுற்றுலா தள த்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினம்தோறும் வந்து செல்கின்றனர்.

ஒகேனக்கல், கூத்தப்பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் ஒகேனக்கல்லில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தில் தான் அவசர சிகிச்சை பெறவேண்டி நிலையுள்ளது.

பெண்கள் தங்களது கர்ப்ப காலங்களில் மகப்பேறு பரிசோதனை செய்து கொள்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அவர்களுக்கு உடல்நிலை குறைவு அல்லது ஆற்றுப் பகுதிகளில் குளிக்கும் போது கண்ணாடி பாட்டில்கள் கால்களை கிழிப்பது, ஆற்றில் அடித்துச்செல்லும் நபர்களை உயிருடன் மீட்கும்பொழுது, இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை போன்ற அனைத்து பிரச்சனைக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தான் நாட வேண்டிய உள்ளது.

இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் போதிய அளவில் இல்லாமல் ஐந்து செவிலியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே செவிலியரை வைத்து செயல்பட்டு வருகிறது.

அதே போல இந்த ஆரம்ப சுகாதார நிலையம் காலை 8 முதல் மாலை 4 மணி வரை செயல்பட்டு வருவதாலும், அதற்கு மேல் செவிலியர்கள் பற்றாக்குறையால் ஆரம்ப சுகாதார நிலையம் ஆனது மூடப்படுகின்றன. இதனால் இங்குள்ள மக்கள் இரவு நேரங்களில் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் சுமார் 16 கிலோமீட்டர் வனப்பகுதிகளை கடந்து சிகிச்சை பெறுவதற்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் செவிலியர்களை நியமிக்க வலியுறுத்தி பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மாவட்ட மருத்துவ நிர்வாகமும் உடனடியாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களின் நலன் கருதி செவிலியர்களை நியமிக்கப்பட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News