ரேசன் பொருட்கள் கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
- நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- பொது விநியோக திட்ட பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு பொது விநியோக திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளன.
இதனை தடுக்க பொது மக்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண் 1800 599 5950 வெளியிடப்பட்டது.
இதனையடுத்து காவல் துறை இயக்குநர் வன்னிய பெருமாள் உத்தரவின்படி கோவை மண்டல எஸ்.பி பாலாஜி மேற்பார்வையில் டி.எஸ்.பி விஜயகுமார் தலைமையில் தருமபுரி குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் பொது விநியோக திட்ட பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும்.
இதில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் இந்த கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் புகார் அளிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.