கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி சிறப்பு முகாம்: மாவட்ட கலெக்டர் ஆய்வு
- கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 10,90,021 வாக்காளர்கள் உள்ளனர்.
- பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சா வடி மையத்தில் வாக்களர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறு கிறது. அதன்படி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண் டார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணை யம் மற்றும் சென்னை தலை மை தேர்தல் அலுவலர் அறி வுரைகளின்படி கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் கடந்த 5.1.2023 முதல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ் 18 வயது (1.1.2024 தகுதி நாளாக கொண்டு) நிரம்பி யவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக பணி மேற்கொள்ளப்பட்டு, கடந்த மாதம் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. இவ்வரைவு வாக்காளர் பட்டியலில் 27.10.2023 ன்படி கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 10,90,021 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இந்த மாதம் 4,5, 18, 19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி அமை விடங்களிலும் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடைபெறும். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொண்டார். அப்போது வாக்குச்சாவடி மைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.