உள்ளூர் செய்திகள்

சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

Published On 2022-09-11 13:14 IST   |   Update On 2022-09-11 13:14:00 IST
  • சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு தமிழ் கையெழுத்து மற்றும் தமிழ் பொது அறிவு போட்டிகள் நடைபெற்றது.
  • மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசும் வழங்கினார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி வட்டம் தேசிங்குராஜபுரம் இல்லம் தேடி கல்வி மைய 250வது நாள் மற்றும் சுவாமி விவேகானந்தர் சோசியல் வெல்பேர் ஆர்கனைசேஷன் குரோம்பேட்டை மற்றும் சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் மயிலாப்பூர், தமிழ்நாடு ராமகிருஷ்ணா விவேகானந்தர் பாவ் பிரசார் பரிஷத் இணைந்து நடத்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தமிழ் கையெழுத்து மற்றும் தமிழ் பொது அறிவு போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தேசிங்குராஜபுரம் இல்லம் தேடி கல்வி -ரேவதி மையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ராய் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் கோவி. வேதகிருஷ்ணன் வரவேற்றார்.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் துரைராசன் தலைமை வகித்தார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் ராய் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் முன்னிலை வகித்தார். ராய் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முனைவர் நா.துரை ராயப்பன், சென்னை அன்னை பழமுதிர்சோலை நிறுவனர் முனைவர் ரவிச்சந்திரன், கோவி.ரவி வாழ்த்துரை வழங்கி, வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியை ராஜாமணி விவேகானந்தர் மாணவர் இல்லம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அன்புள்ளங்கள் நாகை சமூக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும், ஆசிரியர்களு க்கு நினைவு பரிசு வழங்கினார். ரேவதி வேத கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News