சங்கரன்கோவிலில் நிறுத்தப்பட்ட தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டபோது எடுத்தபடம்.
சங்கரன்கோவிலில் முதன்முறையாக நிறுத்தப்பட்ட தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு
- தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு சங்கரன்கோவில் மார்க்கங்களிலும் நிறுத்தம் வழங்கி தென்னக ரெயில்வே உத்தரவு பிறப்பித்தது.
- இன்று முதன் முறையாக சங்கரன்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்த தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு தி.மு.க., ம.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
நெல்லை - தாம்பரம், தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் (வண்டி எண் 06003/06004) சங்கரன்கோவில் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், ரெயில்வே ஆலோசனைகுழு உறுப்பி னரும், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வுமான ராஜா மற்றும் ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா ஆகியோர் சங்கரன்கோவிலில் நெல்லை - தாம்பரம் சிறப்பு ரெயில் நின்று செல்ல வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு சங்கரன்கோவிலில் இது மார்க்கங்களிலும் நிறுத்தம் வழங்கி தென்னக ரெயில்வே உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து இன்று முதன் முறையாக சங்கரன்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்த தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு தி.மு.க., ம.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ெரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா, ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்ரமணியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட துணை செயலாளர் புனிதா, தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், ம.தி.மு.க. நகர செயலாளர் ரத்தினகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சங்கரன்கோ வில் வந்த ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ம.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சசி முருகன், தி.மு.க. நகர அவை தலைவர் முப்புடாதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், நகர பொருளாளர் வக்கீல்கள் கண்ணன், அன்புச்செல்வன், முத்துராமலிங்கம், சதீஷ், இளைஞர் அணி சரவணன், வார்டு செயலாளர்கள் ராமலிங்கம், வீரமணி, வீரா, சிவா ராமலிங்கம், வைரவேல், தங்கவேல் மற்றும் அஜய் மகேஷ்குமார் பசுபதி பாண்டியன் வீமராஜ், ரகுமான், கவுன்சிலர் புஷ்பம், மாணவரணி அப்பாஸ் அலி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.