உள்ளூர் செய்திகள்

ஆடுகளை திருடும் மர்ம கும்பல்

Published On 2023-06-13 08:33 GMT   |   Update On 2023-06-13 08:33 GMT
  • ராமநாதபுரத்தில் ஆடுகளை திருடும் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
  • திருட்டு கும்பலை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆடு வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தை அடுத்துள்ள தேவிப்பட்டி னத்தை சோ்ந்தவர் சரவணன். இவர் தனது ஆடுகளை கழனிக்குடி கண்மாயில் வழக்கம் போல மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது ஒரு ஆட்டை காணவில்லை. அப்போது அந்த ஆட்டை 2 போ் இரு சக்கர வாகனத்தில் திருடிச் சென்றனர்.

இதைப்பாா்த்த சரவணன் அவா்களை விரட்டி சென்று பிடித்து தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீசார் நடத்திய விசாரணையில் ஆடு திருடியது தாமரை ஊரணி முனீஸ்வரன் (34), தேர்போகி முத்துமாரி என்ற பாப்பா (32) என தெரிய வந்தது. இதைத்தொ டா்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனா்.

இதே போல தனது 3 ஆடுகளை காணவில்லை என்று முருகேசன் என்பவா் ஏா்வாடி போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புத்தேந்தல் பகுதியை சோ்ந்த பூமிநாதன் தனது ஆடுகளை மா்மநபா்கள் திருடிச்சென்று விட்டதாக அளித்தாா். ராமநாதபுரம் பகுதியில் மர்மகும்பல் தொடர்ந்து ஆடுகளை திருடி வருகிறது.

எனவே மாவட்ட காவல்துறை ஆடுகள் திருடப்படுவதை தடுக்கவும், திருட்டு கும்பலை பிடிக்கவும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆடு வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News