உள்ளூர் செய்திகள்
- ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சுவாமி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், கமுதி வீரபத்திர இந்துமதி ஆகியோர் செய்தனர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு பாலம் அருகே சக்தி பாபா கோவில் உள்ளது. இங்கு ஆதிவராஹி அம்மன், நரசிம்மர் நூதன விக்கிரக பிரதிஷ்டை விழா நடந்தது.
முன்னதாக கணபதி நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, 2-ம் கால பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து ஆதிவராகி அம்மன், நரசிம்மருக்கு சிறப்பு கும்ப நீர் அபிஷேகம் மற்றும் பால், தயிர். சந்தனம் இளநீர் பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. கமுதி, கோட்டைமேடு, கண்ணார்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், கமுதி வீரபத்திர இந்துமதி ஆகியோர் செய்தனர்.