- சாயல்குடியில் வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி விழா நடந்தது.
- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்பவனியில் பங்கேற்றனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் மாலையில் ஆலய வளாகத்தில் ஜெபமாலை ஜெபித்து பவனியை வழிநடத்தி திருப்பலியில்பங்கேற்றனர்.
திருப்பலிக்கு முன் ஒப்புரவு அருள் சாதனம் வழங்கப்பட்டது. திருப்பணியை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மின் ஒளி அலங்காரத்தில் அன்னை ஆரோக்கிய மாதா சாயல்குடி வீதிகளில் நகர்வலம் வந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு சாயல்குடி பங்குத்தந்தை பாஸ்கர் டேவிட் தலைமை தாங்கினார்.தொன் போஸ்கோ சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் ஆரோக்கியம், முதல்வர் ஆல்பிரட், பங்கு தந்தைகள் சார்லஸ், பிரபு முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மாதா கோவில் நிர்வாக தலைவர்- செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் காமராஜ் தொம்மை செபஸ்டியன் ஆகியோர் செய்து இருந்தனர். சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகள் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்பவனியில் பங்கேற்றனர்.