ரூ.30 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
- ராராமுத்திரகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வருவாய் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.
- மீட்கப்பட்ட அரசு நிலத்தில் வரப்பு அமைக்கும் பணி நடைபெற்றது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வருவாய் கிராமத்தில் பல வருஷமாக தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்த 30 லட்சம் மதிப்பிலான 50 சென்ட் அரசு நிலம் ஊராட்சி மன்ற தலைவர் சோழன் முயற்சியால் மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன், நில அளவையர் அழகேசன்.
வருவாய் ஆய்வாளர் கமலி, கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் ஆகியோரை கொண்ட வருவாய்குழுவினர் மற்றும் ஊராட்சிதுறையினர் மூவம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.
பின்னர் மீட்கப்பட்ட அரசு நிலத்தை தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு வரப்பு அமைக்கும் பணி நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் புனிதாபிரகலாதன், ஊராட்சி செயலாளர் அசோக் பணிதல பொறுப்பாளர்கள்.
தேசிய ஊரக வேலைதிட்ட பணியாளர்கள் உடன் இருந்தனர்.
அரசு நிலத்தை மீட்க நடவடிக்கைஎடுத்த ஊராட்சி மன்ற நிர்வாகிகளுக்கும், வருவாய்துறையினருக்கும் கிராமமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.