ஜே.சி.பி எந்திரம் மூலம் கழிவு நீர் கால்வாயை சீரமைத்த போது எடுத்தபடம்.
சூளகிரி ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு
- கால்வாய் இணைப்பு பகுதியில் சரியாக இணைக்கபடாததால் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி நின்றது.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை சீரமைத்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜர் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சில வாரங்களுக்கு முன் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் இக்கால்வாயானது மற்ற கால்வாய் இணைப்பு பகுதியில் சரியாக இணைக்கபடாததால் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்த செய்தியானது மாலை மலரில் வெளியானது. இதனையடுத்து சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு சிமெண்ட் குழாய் அமைத்து கழிவு நீர் வாய்க்கால்களை சீர்ப்படுத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.