உள்ளூர் செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவரின் குழந்தைகளுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலை வழங்கிய போது எடுத்த படம்.


சில்லரைபுரவு ஊராட்சியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை

Published On 2022-12-07 14:54 IST   |   Update On 2022-12-07 14:54:00 IST
  • தென்காசி ஊராட்சி ஒன்றியம் சில்லரைபுரவு ஊராட்சியை சேர்ந்த சொர்ண ராஜ் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதித்து இறந்தார்.
  • சில்லரைபுரவு பஞ்சாயத்து தலைவர் குமார் நிவாரண தொகை தலா ரூ.3 லட்சம் மொத்தம் 6 லட்சத்திற்கான காசோலைகளை தாயார் லலிதா முன்னிலையில் வழங்கினார்.

தென்காசி:

தென்காசி ஊராட்சி ஒன்றியம் சில்லரைபுரவு ஊராட்சியை சேர்ந்த சொர்ண ராஜ் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதித்து இறந்தார். இந்நிலையில் கொரோனா பாதித்து உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் வாழ்வாதாரம் மேம்படமத்திய அரசு அறிவித்த நிவாரண தொகையை சில்லரைபுரவு பஞ்சாயத்து தலைவர் குமார், உயிரிழந்த சொர்ண ராஜ் மகள் சோபியா, மகன் சச்சின் டெண்டுல்கர் ரிடம் தலா ரூ.3 லட்சம் மொத்தம் 6 லட்சத்திற்கான காசோலைகளை தாயார் லலிதா முன்னிலையில் வழங்கினார்.

நிவாரண தொகையை பெற்றுக் கொண்ட சொர்ணராஜ் குடும்பத்தினர், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பஞ்சாயத்து தலைவர் குமாருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News