தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.
தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு நிவாரணம்
- ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- ஜெயக்குமார் மனைவி தேவகியிடம் நேரில் சென்று நிவாரண உதவி வழங்கி அரசின் கான்கிரீட் வீடு கட்டி தருவதாக உறுதியளித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பச்சை பெருமாநல்லூர் ஊராட்சியை சேர்ந்த மத்தளமுடையான் கிராமம் ஜெயக்குமார் என்பவரின் குடிசை வீட்டில் நேற்று மின் வயரிலிருந்து கசிந்த மின்சாரத்தால் தீப்பொறி ஏற்பட்டு கூரையில் பட்டு வீடு எரிந்து சாம்பல் ஆனது.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும், வீட்டு உபயோக பொருட்களும் எரிந்து சாம்பலாயின.
இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் தீ விபத்தில் வீட்டை இழந்த ஜெயக்குமார் மனைவி தேவகியிடம் நேரில் சென்று நிவாரண உதவி வழங்கி அரசின் கான்கிரீட் வீடு கட்டி தருவதாக உறுதியளித்தனர்.
தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு நிவாரணம்ஒன்றியக்குழு உறுப்பினர் காமராஜ், தி.மு.க. முன்னாள் ஒன்றியதுணைச் செயலாளர் சம்பத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.