உள்ளூர் செய்திகள்

ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டையை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு

Published On 2023-06-05 14:18 IST   |   Update On 2023-06-05 14:18:00 IST
  • எங்கள் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகி றோம். 40 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது.
  • ஓமலூர் - தாரமங்கலம் பிரதான சாலையுடன் இணைக்கும் வண்டிப்பாதையை, பாதையின் இருபுறமும் விவசாய நிலங்களுடன் சேர்ந்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பச்சனம்பட்டி மற்றும் எம்.செட்டிப்பட்டி ஆகிய கிராம எல்லைக்கு உட்பட்ட பாப்பாங் காட்டூர், பஞ்சாங்கரடு பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

எங்கள் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகி றோம். 40 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது. இந்த பகுதியில் நாங்கள் பயன்படுத்தி வந்த ஓமலூர் - தாரமங்கலம் பிரதான சாலையுடன் இணைக்கும் வண்டிப்பாதையை, பாதையின் இருபுறமும் விவசாய நிலங்களுடன் சேர்ந்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர்.

இதனால் நாங்கள் விளைவித்த பொருட்களை எடுத்துச் செல்ல முடிய வில்லை. பள்ளி குழந்தைகள் பள்ளி செல்வதற்கும் அவ சர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வருவதற்கும் வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

சாலையை அளவீடு செய்து தார் சாலை அமைத்து தரும்படி பஞ்சா யத்து தலைவர், தாசில்தார், சப்-கலெக்டர், கலெக்டர், முதல்-அமைச்சரின் நேரடி முகவரி என 3 ஆண்டு களுக்கும் மேலாக மனுக்கள் கொடுத்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எனவே சாலை வசதி ஏற்படுத்தி தரும் வரை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், சேலம் வரும் முதல்-அமைச்சரிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஒப்படைக்கவும், பள்ளி செல்லும் குழந்தை களை பள்ளிக்கு அனுப்பா மல் போராட்டத்தில் ஈடுப டும் நிலைக்கு அதிகாரிகளால் தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News