உள்ளூர் செய்திகள்

 பிரம்ம கமலம் பூவிற்கு தீபாராதனை காட்டி வழிப்பட்ட பொதுமக்கள்.

சேலத்தில் நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூ

Published On 2023-08-17 15:00 IST   |   Update On 2023-08-17 15:00:00 IST
  • சேலம் அழகாபுரம் சிவாய நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி.
  • இவர் தனது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் செடி கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.

கருப்பூர்:

சேலம் அழகாபுரம் சிவாய நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி. இவர் தனது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் செடி கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இந்த செடி இரவில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.

இந்த நிலையில் பிரம்ம கமலம் செடியில் நேற்று இரவு 10 மணி அளவில் பூ பூத்தது. ஒரே செடியில் 12-க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்தன. இதனை அறிந்த அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து பூவுக்கு தேங்காய், பழம் உடைத்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.

இதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், பிரம்ம கமலம் பூ அனைத்து கடவுள்களுக்கும் படைக்கும் ஓர் அற்புதமான பூ ஆகும். இதில் சங்கு, சக்கரங்கள் உள்ளது. இதனால் இரவில் மட்டும் பூக்கும் இந்த அதிசய பூவை வணங்கினால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கையாகும் என்றார்.

Tags:    

Similar News