உள்ளூர் செய்திகள்
- சேலம் அருகே லோகூர்- டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்க ளுக்கிடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவத்தன்று கடக்க முயன்றார்.
- அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.
சேலம் அருகே லோகூர்- டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்க ளுக்கிடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவத்தன்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே நிலைய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் நீல நிற டிசர்ட், கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். ஆனால் அவரது பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.