அய்யாதுரைப்பாண்டியன் மாணவியின் தந்தையிடம் கல்வி உதவித்தொகையை வழங்கிய காட்சி.
சங்கரன்கோவில் மாணவிக்கு கல்வி உதவி தொகை- அய்யாதுரைப்பாண்டியன் வழங்கினார்
- கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் ராகசுவேதா பி.எஸ்.சி பயோடெக்னாலஜி படித்து வருகிறார்.
- ராகசுவேதாவின் முழு கல்வி கட்டணத்தை வரைவோலையாக அய்யாதுரைப் பாண்டியன் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரைக் கண்டார்குளம் தெற்கு தெருவை சேர்ந்த பண்டாரக் கண்ணு என்பவரது மகள் ராகசுவேதா. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி பயோடெக்னாலஜி படித்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினர் ஏ.வி.கே கல்வி குழும தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான அய்யாதுரைப் பாண்டியனை சந்தித்து மாணவி ராகசுவேதாவின் கல்வியை தொடர நிதி உதவி அளித்திட கோரி இருந்தனர். அதனை ஏற்று அய்யாதுரைப் பாண்டியன் ஏ.வெங்கடேஷ்குமார் நினைவு அறக்கட்டளை சார்பில் ராகசுவேதாவின் முழு கல்வி கட்டணத்தை வரைவோலையாக அவரது தந்தை பண்டாரக் கண்ணுவிடம் வழங்கினார். அப்பொழுது அ.தி.மு.க. பிரமுகர் ஊத்துமலை இளைய ஜமீன்தார் குமரேச ராஜா, அய்யாத்துரைபாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி, பேரவை செயற்குழு உறுப்பினர்கள் பேச்சி முத்து , பசும்பொன், சுபிக்ஷா கருப்பசாமி , ஏ.ஏ.ஆர் ரிசார்ட்ஸ் நிர்வாகி சிவசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.