உள்ளூர் செய்திகள்

மலர்களை மாலையாக தொடுக்கும் பக்தர்கள்.

சேலத்தில் இருந்து திருப்பதிக்கு 5 டன் வண்ண மலர்கள் அனுப்பிவைப்பு

Published On 2022-09-29 14:52 IST   |   Update On 2022-09-29 14:52:00 IST
  • நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
  • ஒவ்வொரு ஆண்டும் மலர்கள் அனுப்பப்பட்டு வருகிறது

சேலம்:

திருப்பதி திருமலையில் ஸ்ரீ வாரி பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது. வருகிற 5-ந் தேதி வரை விழா நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.

பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை மறுநாள் 1-ந் தேதி நடக்கிறது.இதில் வெங்கடாஜலபதி சுவாமிக்கு பல டன் மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படும் .இதற்காக சேலத்தில் இருந்து ஸ்ரீ பக்திசாரர் பக்தி சபா சார்பில் 5 டன் மனமுள்ள பூக்கள் இன்று திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் மலர்கள் மாலைகளாக தொடுக்கப்பட்டன. இந்த பணிகளில் ஏராளமான பக்தர்கள் ஈடுபட்டனர். மண்டபம் ஹால் முழுவதும் வண்ண மலர்களாக காட்சியளித்தன. இதில் ஏராளமான பக்தர்கள் அமர்ந்து மலர்களை மாலைகளாக தொடுத்தனர். இந்த பூக்கள் நாளை திருப்பதியை சென்றடையும் ,பின்னர் நாளை மறுநாள் சுவாமிக்கு அலங்காரம் செய்ய பயன்படுத்தப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை சுந்தரி சண்முகம், மெர்க்குரி ஜெம் என்டர்பிரைசஸ் மணி ஷங்கர் , எஸ்.டி. சாமில் குமார், ஓமலூர் மோகன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர். பக்தி சாரர் பக்த சபா மூலமாக ஏற்கனவே ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, முதியோர் இல்லங்கள் மற்றும் அனாதை குழந்தைகள் காப்பகத்திற்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கும் ஒவ்வொரு ஆண்டும் மலர்கள் அனுப்பப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மலர்கள் அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News