உள்ளூர் செய்திகள்

போட்டியில் சீறிப்பாய்ந்த கானைகள்

மாட்டுவண்டி பந்தயம்

Published On 2023-07-03 07:48 GMT   |   Update On 2023-07-03 07:48 GMT
  • மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
  • சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் தேவ ரம்பூர் கிராமத்தில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எல்கை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

முன்னதாக போட்டியில் பங்கேற்ற பெரிய மாடு களுக்கு தேவரம்பூர் விலக்கு ரோட்டில் இருந்து 7 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 5 மைல் தூரமும் விழா குழு வினரால் நிர்ணயம் செய்யப் பட்டது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராம்நாடு, தேனி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட போட்டி யாளர்கள் கலந்து கொண்ட னர். இதில் முதல் பரிசாக பரவை நகரத்தைச் சேர்ந்த முத்து தேவருக்கும், 2-ம் பரிசாக பூக்கொள்ளை காளிமுத்துக்கும், 3-வது பரிசை பரளி கிராமத்தைச் சேர்ந்த கேரளா பிரதர்சும் பெற்றனர். நினைவு பரிசை தேவரம்பூர் கிராமத்தை சேர்ந்தவருக்கும் வழங்கப்பட்டது. அதே போல் சின்ன மாட்டு பந்தயத்தில் வெற்றி பெற்ற போட்டியாளர்களில் முதல் பரிசை குண்டேந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த கனக வல்லி, 2-ம் பரிசை தேவரம் பூர் கிராமம் ராமநாதன், 3-ம் பரிசை தேவரம்பூர் கிராமம் சுதாகர், 4-ம்பரிசை பொய்கரைபட்டி பாலு ஆகியோருக்கும் விழா குழுவினரால் வழங்கப்பட் டது.

மேலும் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு கோப்பைகளும் சாரதிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடு களை தேவரம்பூர் கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இப் பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர் களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News