உள்ளூர் செய்திகள்
வயிற்றுப் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு
- வயிற்றுப் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு
- விழா ஏற்பாடுகளை முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் செய்திருந்தார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் பழமையான வயிற்றுப் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி திருமஞ்சனம், மஞ்சள், பால், தயிர், அரிசி மாவு, பஞ்சாமிர்தம், விபூதி, பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனை பொருட்களை கொண்டு பிள்ளையாருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் வயிற்றுப் பிள்ளையார் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொழுக்கட்டை, சுண்டல், கனி வகைகள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, அன்ன வகைகள் பிள்ளையாருக்கு படைக்கப்பட்டன. பின்னர் தீபாராதனை நடந்தது. பக்தர்க.ளக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் செய்திருந்தார்.