உள்ளூர் செய்திகள்

தருமபுரி புத்தக திருவிழாவில் கலைநிகழ்ச்சி நடத்திய ஸ்ரீகிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகளை படத்தில் காணலாம்.

தருமபுரி புத்தகத் திருவிழாவில் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரிமாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி

Published On 2023-09-15 16:11 IST   |   Update On 2023-09-15 16:11:00 IST
  • தருமபுரியில் வள்ளலார் திடலில் கடந்த 8-ந் தேத முதல் புத்தகத் திருவிழா தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  • தருமபுரி புத்தகத் திருவிழாவில் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் 16 ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவுகள் நடத்தி வருகின்றது.

இதில் சுமார் 187 மாணவ, மாணவிகள் படித்து வருகின் றனர். இவர்கள் அனைவரும் மருத்துவம் சார்ந்த பாடப் பிரிவில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தருமபுரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் அனை–வரையும் அந்த புத்தகத் திருவிழாவிற்கு அழைத்துச் சென்று மருத்துவம் சார்ந்த புத்த–கங்களை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எளிதாக கிடைக்க வழிவகை செய்தனர்.

அது மட்டுமல்லாமல் அனைத்து விதமான மருத்துவம் சார்ந்த புத்த கங்களும் தள்ளுபடி விலை யில் புத்தகத் திருவிழாவில் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புத்தகத் திருவிழாவில் ஸ்ரீகி ருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி சார்பாக கல்லூரி மாணவ மாணவிகள் கிரா மப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

புத்தக திருவிழாவிற்கு வருகை தரும் பொது மக்க–ளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி கல்லூரி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் கிருஷ் ணமூர்த்தி, கல்லூரி பேராசிரியர்கள் மகேஸ்வரி, குமுதா, ரஞ்சிதா, செல்வி, கல்லூரி நிர்வாக அலுவலர் ஜோதிபாசு, துணைப் பேராசிரியர்கள் கவினா, சந்தியா அனைவரும் ஒன்றி ணைந்து இந்த புத்தக திரு விழா கலை நிகழ்ச்சியை வழி நடத்தினர்.

Tags:    

Similar News