உள்ளூர் செய்திகள்

உழவர்சந்தைக்கு கூடுதல் கட்டிடம் கட்டும்பணியினை வேல்முருகன்எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆய்வு செய்தனர்.

பண்ருட்டியில் தரமில்லாமல் கட்டிடம் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்

Published On 2022-06-17 10:18 GMT   |   Update On 2022-06-17 10:26 GMT
  • பண்ருட்டியில் தரமில்லாமல் கட்டிடம் கட்டும் பணி வேல்முருகன் எம்.எல்.ஏ.வின் அதிரடி நடவடிக்கையால் நிறுத்தப்பட்டது.
  • 10 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு பணி மற்றும் தட்டாஞ்சாவடியில் உள்ள உழவர் சந்தைக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை நேரில்பார்வையிட்டார்.

கடலூர்:

பண்ருட்டி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை வேல்முருகன் எம்.எல்.ஏ.நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது பண்ருட்டி டைவர்ஷன் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூ. 10 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு பணி மற்றும் தட்டாஞ்சாவடியில் உள்ள உழவர் சந்தைக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை நேரில்பார்வையிட்டார்.

கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு மற்றும் கட்டுமான பொருட்கள் தரம் இல்லாமல் இருப்பது குறித்து கேட்டார். ஒப்பந்தகாரர் அரசு விதிகளுக்கு உட்பட்டு இரும்பு மற்றும் கட்டுமான பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதால்தரமில்லாமல் கட்டப்படும் கட்டிங்களை கட்டப்படுவதை நிறுத்த உத்தரவிட்டார்.

ஆய்வின் போது நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், ஆணையாளர் மகேஷ்வரி, துணை தலைவர் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News