சாத்தான்குளம் மகளிர் கல்லூரியில் சேர இணையதளம் மூலம் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்-கல்லூரி முதல்வர் தகவல்
- இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவிகள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- இணையதள முகவரியில் ஜூலை 7-ந்தேதி வரை பதிவு செய்யலாம்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புக்களான தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதவியல், வணிக நிர்வாகவியல், வணிகவியல் ஆகிய பட்டப் படிப்புகளுக்கு மாணவிகள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவிகள் விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரியில் ஜூலை 7-ந்தேதி வரை பதிவு செய்யலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவிகள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் ரூ.48 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டிய தில்லை. பதிவு கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.
இந்த கட்டணத்தை விண்ணப் பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம் என கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தெரிவித்துள்ளார்.