உள்ளூர் செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-05-25 15:05 IST   |   Update On 2023-05-25 15:05:00 IST
  • கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 19 ஆம் தேதி முதல் யாக வேள்விகள் நான்கு காலங்களாக நடைபெற்றது
  • வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண வடிவம் நடைபெற்றது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கல்லாவி மெயின் ரோட்டில் உள்ள வள்ளி தெய்வநாயகி சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 19 ஆம் தேதி முதல் யாக வேள்விகள் நான்கு காலங்களாக நடைபெற்றது. கோபூஜை கஜ பூஜை நடைபெற்று ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக யானை மீது புனித நீர் எடுத்து வரப்பட்டது.

கோவிலில் உள்ள கணபதிகள் பரிவார தேவதைகள் ஆகியோருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் விமானம் ராஜகோபுரம் ஆகியவைகளுக்கு சிவாச்சாரியார்கள் சர்வ சாதகம் சிவசுப்பிரமணிய சிவம் சிவப்பிரசாத்சிவம் மணிகண்ட சிவம் ஆகியோர் அபிஷேகம் செய்தார்கள்.

சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண வடிவம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் ரத்தினகிரி பாலமுருகன் சுவாமிகள் கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்க வாசகர் சுவாமிகள், எலவனாசூர் கோட்டை பகவதி சுவாமிகள், கந்திகுப்பம் பைரவ சாமிகள் ஆகியோர் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரதான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.

Tags:    

Similar News