உள்ளூர் செய்திகள்
பயன்பாட்டிற்கு வராத ஆரம்ப சுகாதார நிலையம்
- துணை சுகாதார நிலையம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
- கட்டிட பணி முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் மூடியே கிடக்கிறது.
படப்பை:
படப்பை அருகே உள்ள செரப்பணஞ்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 15-வது நிதிக் குழு மானியத்தில் துணை சுகாதார நிலையம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த கட்டிட பணி முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் மூடியே கிடக்கிறது.
இதனால் இந்த புதியகட்டிடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே துணை சுகாதார நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.